ஜூன் 1ம் தேதி முதல் 5ம் தேதி வரை ஒரு வாரம் முழுவதுமே இந்திப் பங்குச்சந்தைகள் தொடர்ந்து ஏற்றத்தில் இருந்தன. கடந்த வாரத்தில் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 34 ஆயிரம் புள்ளிகளைக் கடந்தது. வர்த்தகத்தின் இறுதி நாளான ஜூன் 5ம் தேதி, 34287 புள்ளிகளில் நிறைவடைந்தது. அன்று மட்டும் 306 புள்ளிகள் வரை மும்பை பங்குச்சந்தை ஏற்றம் கண்டிருந்தது.
இந்த நிலையில் வாரத்தின் முதல் நாளான இன்று இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றதுடன் நிறைவடைந்துள்ளது. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 53 புள்ளிகள் உயர்ந்து 34,371ல் நிறைவடைந்துள்ளது. தொடக்க நேர வர்த்தகத்தில் 500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்திருந்த சென்செக்ஸ் இறுதியில் குறைந்துவிட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 25 புள்ளிகள் அதிகரித்து 10,167 புள்ளிகளாக உள்ளது.