Categories
உலக செய்திகள்

“சாண்டா கிளாஸ் வருகையால் இப்படி ஆயிடுச்சு”… 18 பேர் பலி… சோகத்தில் முடிந்த கிறிஸ்மஸ்..!!

பெல்ஜியத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் பண்டிகையில் சாண்டா கிளாஸ் வருகையால் 18 பேர் பலியாகியுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிறிஸ்மஸ் பண்டிகை என்றால் முதலில் நம் நினைவுக்கு வருவது சாண்டா க்ளாஸ்ம், பரிசுப்பொருட்களும் தான். அந்த வகையில் பெல்ஜியத்தில் நடைபெற்ற ஒரு கிறிஸ்மஸ் கொண்டாட்டம் தற்போது சோகத்தில் முடிந்துள்ளது.அந்நாட்டின் ஆண்ட்வெர்ப், மோலில் உள்ள ஹெமெல்ரிஜ்க் பராமரிப்பு இல்லத்திற்கு சாண்டா கிளாஸ் உடையணிந்த நபரின் வருகைக்கு பிறகு, அங்குள்ள ஊழியர்கள் மற்றும் குடியிருப்புகளுக்கு தொற்று ஏற்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. 18 குடியிருப்பாளர்கள் இறந்துவிட்டதாகவும், 171 பேருக்கு ஏற்பட்டதாகவும் அந்த ஊர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் கிறிஸ்துமஸ் தினத்தன்று ஐந்து நபர்கள் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. கொரோனாவிற்கு கிறிஸ்மஸ் தாத்தா தான் காரணம் என்று தெளிவாக தெரியவில்லை. கிறிஸ்மஸ் தினத்தன்று உள்ளூர் மேயர் விம் கேயர்ஸ் கூறியதாவது: இது பராமரிப்பு இல்லத்திற்கு மிகவும் கருப்பு நாள். கிறிஸ்துமஸ் தாத்தா வந்த தினம் அன்று. சில குடியிருப்பாளர்கள் மார்க் அணியவில்லை. மேலும் குறைந்து சமூக இடைவெளியை பின்பற்றியது பொறுப்பற்ற செயல். அவரின் வருகை ஒரு முட்டாள்தனமான யோசனை தெரிவித்தார். பெல்ஜியம் நாட்டில் 19,158 பேர் கொரோனா காரணமாக இறந்துள்ளது. அதாவது அவர்களின் மக்கள் தொகையை கணக்கிடும் போது உலகின் மோசமான இறப்பு விகிதங்களில் ஒன்று. அந்நாட்டில் 6,38,000 அதிகமான கொரோனா உறுதி செய்யபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |