12 நாள் ஊரடங்கு ஆரம்பிக்க இன்னும் ஒரு நாள் மட்டுமே இருக்கும் நிலையில் 3 மாவட்டங்களிலுள்ள டாஸ்மாக் மதுக்கடைகளில் கூடுதலாக 7 கோடி ரூபாய்க்கு மதுவிற்பனை செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகின்றது. தினமும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டு தான் இருக்கிறது. அதேசமயம் குணமடைந்து வீடு திரும்புவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது. மேலும் மற்ற மாவட்டங்களை காட்டிலும் சென்னையில் தான் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தினமும் ராக்கெட் வேகத்தில் உயர்ந்து கொண்டே செல்கிறது.
கடந்த சில வாரங்களாக 1000-க்கும் மேல் சென்ற கொரோனா பாதிப்பு நேற்று மட்டும் தான் ஆயிரத்திற்குள் (919) வந்துள்ளது.. மேலும் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் விதமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் வருகின்ற 19ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை 12 நாட்களுக்கு மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படவுள்ளது.
இந்தநிலையில் 12 நாள் ஊரடங்கு நடைமுறைக்கு வருவதற்கு இன்னும் ஒரு நாள் மட்டுமே இருக்கும் நிலையில், டாஸ்மாக் மதுக்கடைகளில் கூடுதலாக 7 கோடி ரூபாய்க்கு மதுவிற்பனை ஆகியுள்ளது.. 19ஆம் தேதி முதல் 12 நாள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட உள்ளதால் 3 மாவட்டங்களில் டாஸ்மாக் மதுவிற்பனை அதிகரித்துள்ளது.
திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் மொத்தம் உள்ள 300 டாஸ்மாக் மதுக் கடைகளில் கூடுதலாக 7 கோடி ரூபாய்க்கு மதுவிற்பனை ஆகியுள்ளது.. வழக்கமாக நாள் ஓன்றுக்கு ரூ 18 கோடிக்கு மதுவிற்பனையாகி வந்த நிலையில், ரூ.25 கோடிக்கு மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஒருநாள் மட்டுமே இருப்பதால் மதுப்பிரியர்கள் நிறைய வாங்கி குடித்தார்களா? அல்லது வீட்டில் குவித்தார்களா? என்று தெரியவில்லை..