ரஷ்யாவில் தனது திறமையால் பிரஞ்ச் புல் வகை நாய் ஸ்கேட்டிங் செய்து அசத்தியது.
ரஷ்யாவில் 5 வயது நாய் ஓன்று தனது ஸ்கேட்டிங் திறமையால் மிகவும் பிரபலமடைந்துள்ளது. பிரஞ்ச் புல் வகையான சார்ந்த அந்த நாயின் பெயர் சோனியா. இந்த நாய் செல்யபின்ஸ்க் (Chelyabinsk) நகரில் தனது உரிமையாளருக்கு ஈடு கொடுத்து சிறப்பாக ஸ்கேட்டிங் செய்து அசத்தி வருகிறது.
இதுபற்றி உரிமையாளர் டிமிட்ரி பேசுகையில், சின்ன குட்டியாக இருக்கும் போதிலிருந்தே இயற்கையாகவே சோனியாவுக்கு ஸ்கேட்டிங் செய்வதற்கு ஆர்வம் இருந்ததாக தெரிவித்தார்.
மேலும் நான் அதற்கு எந்த பயிற்சியும் அளித்தது இல்லை அதுவாகவே பழகி விட்டதாகவும் பெருமையாக கூறினார்