கேரளாவில் இன்று 131 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இன்று சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மும்பையில் இருந்து திரும்பி வந்த 76 வயது நபர் திருவனந்தபுரத்தில் இறந்தார். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள்ளது. தற்போது கேரளத்தில் கொரோனவால் பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,441 ஆக அதிகரித்துள்ளது. அதில், இதுவரை 2,304 பேர் கொரோனாவில் இருந்து சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர்.
தற்போது, அம்மாநிலத்தில் 2,112 பேர் சிகிச்சையில் உள்ளனர். அதிகபட்சமாக மலப்புரத்தில் 267 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதனைத் தொடர்ந்து வடக்கு கேரளாவில் உள்ள கண்ணூர் பகுதியில் சிகிச்சைபெற்று வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.