குளிர்காலத்தில் நாம் என்னென்ன உணவுகளை சாப்பிடக் கூடாது என்பதை பற்றி இதில் தெரிந்து கொள்வோம்.
குளிர்காலத்தில் சளித் தொந்தரவு வரக்கூடும் சில உணவுப் பழக்கங்களை பொறுத்தவரை எப்போதும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். பருவ காலத்திற்கு ஏற்றவாறு நாம் உணவுகளையும் மாற்றிக்கொள்ளவேண்டும். மாலை முதல் காலை வரை கடும் குளிர் உடலில் எதிர்ப்பு சக்தி நிறைந்த உணவுகளை நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். வெப்பநிலை குறைந்த இந்த காலம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை குறைத்துவிடும். நோயின் அறிகுறிகளை அதிகரிக்கும் உணவுகள் குறித்து நாம் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டும்.
இனிப்புப் பொருள்கள்
செயற்கையாக சுவையூட்டப்பட்ட உணவுகள், பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் பழச்சாறுகள், இனிப்பு சேர்த்து ஸ்வீட் வகைகள் கண்டிப்பாக நாம் தவிர்க்க வேண்டும். சக்கரை நிறைந்த பொருட்களை நாம் எடுத்துக் கொண்டால் மிக மோசமான நோய் வருவதற்கு வாய்ப்புண்டு. உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்தும் வெள்ளையணுக்களின் ஆற்றலை குறைப்பதால் நம் உடம்பில் கிருமிகள் உற்பத்தியாகும்.
வறுத்த உணவுகள்
உணவுகளில் வறுத்த உணவுகள் என்றால் அனைவருக்கும் பிடிக்கும். வறுத்த உணவுகளில் கொழுப்புக்கள் அதிகம் உள்ளது. உடலில் நோய் எதிர்ப்பு மண்டலம் செயல்படுவதற்கு எதிராக இருக்கும் அதிக கொழுப்பு உள்ளடக்கம், உடலின் வீக்கத்தை ஏற்படுத்தும். அது சளித் தொல்லையை உண்டாக்கும். எண்ணெயில் பொரித்த வடை, பஜ்ஜி, போண்டா, பிரைடு சிக்கன் எல்லாவற்றையும் நாம் தவிர்க்க வேண்டும்.
காப்பி
குளிர்காலத்தில் நாம் காப்பி தான் குடிப்போம். டீ குடிப்பவர்கள் கூட குளிர்காலத்தில் காப்பியை தான் தேடுவார்கள். ஆனால் காப்பியை குளிர்காலத்தில் தவிர்க்க வேண்டும். ஏனெனில் உடலில் நீரோட்டத்தை இது குறைக்கின்றது. குளிர்காலத்தில் ஏற்கனவே நீர் குடிப்பது குறைந்த சூழலில் சூடாக இருக்கும் காப்பியை குடிக்கும் போது அதில் சுக்கு, மல்லி காபி போன்றவற்றை குடிக்கலாம் அல்லது வெதுவெதுப்பான நீரை குடிக்கலாம்.
பால் பொருட்கள்:
சளி, இருமல், தொண்டை வலி போன்ற நோய்கள் இருக்கும் போது பால் பொருட்களை தவிர்க்க வேண்டும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். பால் பொருட்களின் சளிதன்மை அதிகரிக்க செய்வதால் பால் பொருட்களை முற்றிலும் குளிர்காலத்தில் நாம் தவிர்ப்பது நல்லது. ஏனெனில் குளிர்காலத்தில் செரிமானம் தாமதமாக நடக்கும். மேலும் பால் பொருட்களை நாம் சாப்பிட்டால் நம் உடம்பில் பாதிப்பு ஏற்படும்.
ஹிஸ்டமைன் உணவுகள்
ஹிஸ்டமைன் போன்ற உணவுகளை நாம் தவிர்ப்பது நல்லது. அதாவது தக்காளி, காளான், முட்டை, பழங்கள் மற்றும் தயிர் போன்றவை ஹிஸ்டமின் பொருட்கள். இவை சளியை அதிகரிப்பதால் குளிர்காலத்தில் இந்த உணவுகளை தவிர்ப்பது நம் உடல்நலத்திற்கு ஆரோக்கியமானது.