குளிர்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இந்த 4 உணவுகளை உட்கொண்டால் நல்ல பலன் கிடைக்கும்.
கொரோனா நோய்கள் பரவியதிலிருந்து நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பது எப்படி என்று பலரும் தேட ஆரம்பித்துள்ளனர். பருவங்கள் மாறி வரும் காலத்தில் அதற்கு ஏற்ப நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமடையும். இந்த குளிர்காலத்தில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சில உணவுகளை நீங்கள் சேர்த்துக்கொள்ளவேண்டும்.
பழங்கள்:
பழங்கள் மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது மற்றும் பருவகால பழங்களான ஆப்பிள், ஆரஞ்சு, பேரிக்காய், பப்பாளி போன்றவை குளிர் காலத்தில் அதிகமாக எடுத்துக் கொண்டால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
வேர்கடலை:
குளிர் காலத்தில் வேர்கடலை சாப்பிடுவது மிகவும் நல்லது. வேர்க்கடலையில் வைட்டமின்கள் அமினோ அமிலங்கள் மற்றும் புரதங்கள் நிறைந்துள்ளன. வேர்க்கடலை சாப்பிட்டால் கலோரிகளின் அளவு குறையும். உங்கள் எடையை கட்டுபடுத்த இது உதவுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த வேர்க்கடலை நன்மை பயக்கும்.
சாலட்:
குளிர்காலத்தில் நிறைய பழங்களை சாப்பிடுங்கள். ஏனென்றால் சாலட்களை உட்கொள்ளும் போது உடலில் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படாமல் நமக்கு நோயெதிர்ப்பு சக்தியை வலுவாக்கும்.
வெண்ணெய்:
குளிர் காலத்தில் உணவில் வெண்ணெய் சேர்த்து கொண்டால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். வெண்ணை ஒரு நல்ல அளவு புரதத்தையும், கால்சியத்தையும் கொண்டுள்ளதால் உங்கள் ஆரோக்கியத்திற்கு நன்மையை தரும்.