சேலம் மாவட்டத்தில் ஊரடங்கின் போது டாஸ்மாக் கடைகளில் திருட்டு போவதை தடுப்பதற்காக கதவின் மேல் இரும்புக் கம்பிகள் பொருத்தி வெல்டிங் பொருத்தும் பணி நடைபெற்றுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த வருகிற 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்திலுள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டுள்ளதால் சில கடைகளில் பூட்டை உடைத்து மதுபானங்கள் திருடப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் சேலம் மாவட்டத்திலுள்ள முள்ளுவாடி கேட், செவ்வாய்பேட்டை உள்ளிட்ட டாஸ்மாக் கடைகளில் தொழிலாளர்கள் மூலம் ஏற்கனவே உள்ள கதவின் முன் புறத்தில் இரும்பு கம்பிகளை பொருத்தும் பணி தீவிரமாக நடைபெற்றது.
இதுக்குறித்து டாஸ்மாக் ஊழியரிடம் கேட்ட போது மாவட்டத்தில் உள்ள சில கடைகளில் பூட்டை உடைத்து மது திருடிய சம்பவம் ஏற்கனவே நடைபெற்றதால் அதை தடுக்கும் விதமாக டாஸ்மாக் கடையில் ஏற்கனவே போடப்பட்டுள்ள இரும்பு கதவின் மேல் கம்பிகள் பொருத்தி வெல்டிங் வைத்துள்ளோம். இந்த இரும்புக் கம்பியை யாராலும் உடைக்க முடியாது . அதன் மூலம் திருட்டை தடுக்க முடியும் என கூறியுள்ளார்.