லண்டன் நகரில் நடைபெற்று வரும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர் 3-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர் .
லண்டன் நகரில் நடைபெற்று வரும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் நேற்று ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் 2-வது சுற்றில் 20 கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்று சாதனை படைத்த சுவிட்சர்லாந்து வீரரான ரோஜர் பெடரர் , பிரான்ஸ் நாட்டு வீரரான காஸ்குட்டுடன் மோதி ,7-6, 6-1, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்ற பெடரர், 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றார். இதையடுத்து மற்றொரு ஆட்டத்தில் 6- ம் நிலை வீரரான ஜெர்மனியை சேர்ந்த அலெக்சாண்டர் ஸ்வெரேவ், அமெரிக்க வீரர் சான்ட்கிரீனை எதிர்கொண்டு 7-5, 6-2, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றார். இதைத்தொடர்ந்து கிறிஸ்டியன் காரின் (சிலி), மெட்வடேவ் (ரஷியா), பாடிஸ்டா அகுட் (ஸ்பெயின்), பெரேட்டினி (இத்தாலி) ) ஆகியோர் 2-வது சுற்றில் வெற்றி பெற்றனர்.
இதையடுத்து பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் நம்பர் ஒன் வீராங்கனையான ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆஷ்லி பார்ட்டி , ரஷ்ய வீராங்கனை பிளின்கோவாவுடன் மோதி 6-4, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு போட்டியில் சமீபத்தில் நடந்த பிரெஞ்ச் ஓபன் போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்ற செக் குடியரசு வீராங்கனை பார்போரா கிரெஜ்சிகோவா ,ஜெர்மனி வீராங்கனை 7-5, 6-4 எதிர்கொண்டு என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றார். இதையடுத்து பாவ்லிசென்கோவா (ரஷியா), பாலா படோசா (ஸ்பெயின்), செவஸ்தோவா (லாத்வியா) மற்றும் கரோலினா முச்சோவா (செக் குடியரசு) ஆகியோர் 2-வது சுற்றில் வெற்றி பெற்றனர் .