Categories
சினிமா தமிழ் சினிமா

“என்னை தாலாட்ட வருவாளா”…. ரசிகர்களுக்காக பாட்டு பாடி அசத்திய தளபதி….. வைரலாகும் அன்சீன் வீடியோ….!!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் தளபதி விஜய் பீஸ்ட் படத்தை தொடர்ந்து தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்க, பிரகாஷ் ராஜ், சரத்குமார், ஷாம், யோகி பாபு, மீனா, குஷ்பூ, சங்கீதா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இந்த படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு ரிலீசாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து தளபதி 67 திரைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குவது கிட்டத்தட்ட தகவல்கள் உறுதியாகிவிட்டது.  இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் நடிகர் விஜயின் அன்சீன் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அதாவது பிரபலமான விஜய் தொலைக்காட்சியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் தளபதி விஜய் கலந்து கொண்டுள்ளார். அப்போது என்னை தாலாட்ட வருவாளா என்ற பாடலை பாடி அசத்தியுள்ளார். இந்த சம்பவம் நடந்து பல வருடங்கள் ஆன நிலையில் தற்போது தளபதி ரசிகர்கள் இந்த வீடியோவை தற்போது வெளியிட்டுள்ளனர். மேலும் இந்த வீடியோவானது ரசிகர்களை கவர்ந்து தற்போது வலைதளத்தில் வைரலாகி வருகின்றது.

https://twitter.com/itz_PumA_57/status/1586009793235660800?s=20&t=Ri-kbxmoTzfx1jJqUnCVuw

Categories

Tech |