Categories
அரசியல் மாநில செய்திகள்

ஒரே சுடுகாடு கொண்டு வருவீர்களா ? 3 டைம் பிரியாணி போட சொல்லுறோம் – பாஜகவுக்கு சீமான் செம பதிலடி ..!!

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,  ஆ.ராசா பேசுனது சரின்னு இருக்கும் போது, அதன் பக்கத்துல நிற்பது தான் சரி. அண்ணன் ஆ.ராசா பேசுனது தவறு கிடையாது, அவர் புதுசா ஒன்னும் பேசல. 3300 தடவை பெரியார் அவர்கள் பேசிட்டாங்க. எல்லாரும் பேசி இருக்காங்க. வர்ண தர்ம கோட்பாட்டுக்கு எதிராக, எங்க தாத்தா ரெட்டமலை சீனிவாசன், பாட்டனார் அயோத்திதாச பண்டிதர், சிங்காரவேலு,  ஜீவானந்தம் எல்லா பெருமக்களும் போராடியது,

பேசினதும் அதுதான். அதைத்தான் ஆ.ராசா  எடுத்து பேசுறாரு.. இப்படி இருக்குத்துன்னு. ஒரே நாடு,  ஒரு ரேஷன் கார்ட் கொண்டு வாறீங்க தானே.. ஒரே சுடுகாடு கொண்டு வருவீர்களா ? இந்த குளத்தில் எல்லாரும் குளிக்கலாம் அப்படின்னு கொண்டு வருவீர்களா ? சொல்லுங்க. கோயில் கருவறைக்குள் கோவிலை கட்டின எனக்கு இடமில்லை, நான் வெளியே நிக்கணும் அப்படினா…  இது எந்த மாதிரியான தர்மம் இது ?

அத தான அவரு பேசுறாரு. நாட்டின் முதல் குடிமகன் ராம்நாத் கோவிந்து கோவிலுக்குள் போக முடியாமல் ஒரு மரத்தின் நிழலில் யாகம் வளர்த்து சாமி கும்பிட்டு போனதை நீங்க பாத்திங்களா ? நாட்டின் முதல் குடிமகனுக்கே இதுதான் மரியாதை. அப்படினா…  கடைகோடியில்  இருக்கின்ற சாதாரண குடிமகன்களுக்கு என்ன மரியாதை இருக்கு ? அதை தான் ஆ.ராசா பேசுறாரு. இதை எதிர்த்து போராடி ( பாஜகவின் சிறை நிரப்பும் போராட்டம்) ஜெயிலுக்கு போறீங்கன்னா…  தாராளமா போங்க, நல்லா போங்க. மூணு வேலையும் பிரியாணி கூட போட சொல்லுவோம் என தெரிவித்தார்.

Categories

Tech |