தேமுதிக நிர்வாகிகளுடன் அக்கட்சி தலைவர் விஜயகாந்த் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றார்.
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் மாவட்ட செயலாளர் கூட்டம் கட்சி அலுவலகத்தில் நடைபெற்று கொண்டிருக்கிறது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் கட்சியின் பொருளாளர் பிரேமலதாவிஜயகாந்த் , துணை செயலாளர் சுதீஷ் , பார்த்தசாரதி , அவைத் தலைவர் மோகன்ராஜ் உள்ளிட்ட முக்கியமான நிர்வாகிகள் பங்கேற்றனர். தமிழகத்தில் இருக்கக்கூடிய மாவட்ட செயலாளர்களும் இதில் பங்கேற்றுக்ள்ளனர். மேலும் நடந்து முடிந்த நாங்குநேரி , விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் கூட்டணி கட்சியான அதிமுக வேட்பாளர் வெற்றி பெறுவதற்கு உறுதுணையாக இருந்த மாவட்ட நிர்வாகிகளுக்கு பாராட்டுகளை தெரிவிக்கப்பட்டது.
இதில் வரக்கூடிய உள்ளாட்சித் தேர்தலில் எப்படி பணியாற்றுவது , அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியில் இடம் பெற்றதில் உள்ளாட்சி தேர்தலில் எத்தனை இடங்களில் கேட்டுப் பெறுவது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ள பட்டுள்ளது.உள்ளாட்சித் தேர்தலில் தமிழகத்தில் இருக்கக்கூடிய 15 மாநகராட்சியில் நமக்கு தேவையான 3_இல் இருந்து 4 மாநகராட்சி மேயர் கேட்டு பெறுவதற்கான திட்டமும் வைத்துள்ளார்கள். அதேபோல எத்தனை சதவீத உள்ளாட்சி பிரதிநிதிகளை கேட்கலாம் என்றெல்லாம் விவாதிக்கப்பட்டு வருகின்றது.