Categories
மாநில செய்திகள்

மக்களே உஷார்….!! மீண்டும் ஊரடங்கு அமலாகுமா….? மத்திய அரசு அதிர்ச்சி தகவல்….!!!

கொரோனா தொற்று அதிகரித்து வரும் மாநிலங்களுக்கு மட்டும் கட்டுபாடுகள் விதித்துக் கொள்ளும் மாநில அரசுகளுக்கு அனுமதி மத்திய சுகாதார துறை அறிவிப்பு.

கொரோனா தொற்று நாடு முழுவதும் குறைந்து வரும் நிலையில் கட்டுப்பாடுகள் அனைத்தையும் திரும்பப் பெற்றுக் கொண்டது மத்திய அரசு. இதனை தொடர்ந்து தொற்றுகள் அதிகமாக உள்ள மாநிலங்களில் மட்டும் கட்டுப்பாடுகளை விதித்துக் கொள்ளுமாறு மாநில அரசுகளுக்கு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் கடந்த வாரத்தில் மிசோரமில் 84 பேருக்கும், மகாராஷ்டிராவில் 794 பேருக்கும், அரியானாவில் 417 பேருக்கும், டெல்லியில் 826 பேருக்கும், கேரளாவில் இருந்து 21 பேருக்கும் புதிதாக தோற்று பரவியுள்ளது. இது அதற்கு முந்தைய வார பாதிப்பை விட அதிகம்.

இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் அம்மாநிலங்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், “மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் சமூக பொருளாதார நடவடிக்கைகளுக்கு முழு வீச்சில் அனுமதியளித்துள்ள நிலையில் கொரோனா நிலவரம் குறித்தும் தொடர் கண்காணிப்பு அவசியமாகிறது. இதனை தொடர்ந்து கொரோனா பரிசோதனை தொற்று தொடர்பு கண்டறிதல், சிகிச்சை, தடுப்பூசி செலுத்துதல், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றுதல் போன்ற நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறும்” மேற்கண்ட மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் புதிய திரிபான எக்ஸ்இ சில நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. உலக சுகாதார அமைப்பு, ஒமைக்ரான் வைரஸின் பிஏ.2 துணை மாறுபாட்டை விட எக்ஸ்இ எனப்படும் கொரோனா வைரஸின் புதிய திரிபானது, 10 சதவீதம் அதிகமாக பரவ வாய்ப்புள்ளது என எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில் புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் இந்தியாவில் மும்பையில் கண்டறியப்பட்டதாக செய்திகள் வெளியாகின. ஆனால், அங்கு ஒமைக்ரானின் உருமாற்ற வகையான எக்ஸ்இ (XE) வைரஸ் வகைத் தொற்று இல்லை என மத்திய அரசு விளக்கம் அளித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |