Categories
தேசிய செய்திகள்

அக்டோபரில் திரையரங்குகள் திறக்கப்படுமா…?… மத்திய அரசு பதில்…!!

நாடு முழுவதும் திரையரங்குகள் திறப்பது குறித்து இன்னும் எந்த ஒரு முடிவும் எடுக்கப்படவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் மார்ச் மாதம் தொடங்கி தற்போது வரை பொது முடக்கம் அமலில் இருந்துவரும் நிலையில் அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து இருந்தது. ஆனால் இந்த நான்காம் கட்ட ஊரடங்களில் அரசு சில தளர்வுகளையும் அறிவித்துள்ளது. அந்த வகையில் பொதுப் போக்குவரத்து என்பது சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மேலும் திரையரங்குகள் எப்பொழுது செயல்படும் என்ற கேள்வி மக்கள் முன்பு எழுந்து வந்த நிலையில் தற்போது அதற்கான ஒரு முக்கிய அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது.

அதாவது, கொரோனா பொதுமுடக்கம் காரணமாக சென்ற மார்ச் மாத இறுதியில் மூடப்பட்ட திரையரங்குகள் இன்னும் திறக்கப்படாமல் இருக்கிறது. ஆனால், சில வழிகாட்டு நெறிமுறைகளுடன் சினிமா படப்பிடிப்புகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அக்டோபர் 1 ஆம் தேதி முதல் திரையரங்குகள் திறக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் உள்துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், திரையரங்குகளை திறப்பது குறித்து இன்னும் எந்தவொரு முடிவும் செய்யப்படவில்லை என கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |