தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்த்தப்படமாட்டாது என்றும் புதிய பஸ் பாஸ்கள் நாளை முதல் வழங்கப்படும் என்றும் போக்குவரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் இன்று நான்காம் கட்ட ஊரடங்கில் பொது போக்குவரத்து என்பது மாவட்டங்களுக்குள் வெகுவாக ஆரம்பித்து சிறப்பாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. அந்தவகையில் பேருந்துகளில் கட்டணம் என்பது உயர்த்தப்படுமா? மேலும் பழைய பஸ் பாஸ்கள் எப்பொழுது வரை செல்லும் என்பது குறித்த மக்களின் கேள்விக்கு பதில் கொடுக்கும் வகையில் சென்னை சென்ட்ரல் பனிமணையில் ஆய்வு செய்துவிட்டு செய்தியாளர்களிடம் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் பேசினார்.
பஸ் பாஸ்கள் மற்றும் பேருந்து கட்டண உயர்வு குறித்து அவர் பேசுகையில், “அரசு பேருந்துகள் அனைத்தும் இரவு 9 மணி வரை இயக்கப்படும். மேலும் பேருந்துகளில் கட்டண உயர்வு எதுவும் கிடையாது. மாவட்டங்களுக்கிடையே பேருந்துகளை இயக்குவது பற்றி முதலமைச்சர் முடிவெடுப்பார் என்றும் கூறினார். புதிய பஸ் பாஸ்கள் நாளை முதல் வழங்கப்படும், அதே சமயம் பழைய பாஸ்கள் இந்த மாத 15-ம் தேதி வரை செல்லுபடியாகும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.