Categories
அரசியல் மாநில செய்திகள்

ஸ்டாலினுக்கு தைரியம் இருக்கா ? 50வருஷ அரசியல் வேண்டாம்… விலக ரெடியா இருக்கேன் … சவால் விடுத்த பொள்ளாச்சி ஜெயராமன் ..!!

அதிமுக சட்டப்பேரவை துணைத்தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் 50 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் இருந்து விலக தயார் என்று சவால் விடுத்துள்ளார்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நேற்று நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் சட்டப்பேரவை துணைத்தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் கலந்து கொண்டார்.அவர் கூட்டத்தில் பேசியதாவது, பொள்ளாச்சி பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணை சந்தித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்க சொன்ன என் மீதும் என் குடும்பத்தின் மீதும் குற்றச்சாட்டை சுமத்தி ஸ்டாலின் தொடர்ந்து தவறாக பேசி வருகிறார்.

என் மீதோ அல்லது என் மகன் மீதோ இக்குற்றத்தை சுமத்தும் ஆதாரம் இருந்தால் நான் என் 50 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் இருந்து விலகி கொள்கிறேன். எதிர்க்கட்சி தலைவருக்கு தைரியமிருந்தால் சிபிஐயிடம் ஆதாரத்தை தரட்டும் என்று கூறினார்.

Categories

Tech |