Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் பிரதமரின் இலவச உணவு தானிய திட்டம் மேலும் தொடருமா….? மத்திய மந்திரி சொன்ன மிக முக்கிய தகவல்…!!!!

இந்தியாவில் கொரோனா பொதுமுடக்கத்தின் போது ஏழை மக்களுக்கு உதவும் நோக்கத்தில் கடந்த 2020-ம் ஆண்டு 80 கோடி மக்களுக்கு மாதம் தோறும் 5 கிலோ கோதுமை மற்றும் 5 கிலோ அரிசியை மத்திய அரசு இலவசமாக வழங்கி வருகிறது. இந்த திட்டம் கடந்த செப்டம்பர் மாதம் முடிவடைந்த நிலையில் 3 மாதத்திற்கு நீட்டிக்கப்பட்டது. இந்த திட்டம் டிசம்பர் 31-ஆம் தேதியுடன் முடிவடையும்  நிலையில், இது தொடர்பாக மத்திய வேளாண் இணை அமைச்சர் ஷோபா காந்தலஜே ஒரு முக்கிய தகவலை கூறியுள்ளார்.

அதாவது இன்று பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தின் போது இலவச தானிய திட்டத்தை நீட்டிக்கலாமா என்பது குறித்து ஆலோசனை செய்து முடிவெடுக்கப் படுமாம். மேலும் மத்திய அரசிடம் உணவு தானியம் போதுமான அளவில் கையிருப்பில் இருப்பதாகவும், இதற்காக கடந்த 28 மாதங்களில் மத்திய அரசு 1.80 லட்ச ரூபாயை செலவு செய்துள்ளது என்றும் கூறியுள்ளார்.

Categories

Tech |