நடுத்தர, ஏழை மக்களுக்கும் பிரதமர் மோடியின் திட்டங்கள் பலனளிக்குமா? என ட்விட்டரில் கமலஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையானது அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் இதுவரை 74,281 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுதும் மே 17ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. 4வது முறையாக ஊரடங்கை நீட்டிக்க உள்ளதாகவும், அதுகுறித்த அறிவிப்புகள் 18ம் தேதி வெளியாகும் என பிரதமர் மோடி அறிவித்திருந்தார்.
மேலும் பொருளாதார சீரமைப்புத் திட்டங்களுக்காக ரூ.20 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்வதாகவும், சிறு, குறு, நடுத்தர தொழில்களை மேம்படுத்தவும் விவசாயிகள், வியாபாரிகள், தொழிலாளர்களின் நலனுக்காகவும் இந்த சிறப்பு திட்டம் அமல்படுத்தப்படும் என பிரதமர் மோடி கூறியிருந்தார். இது குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று மாலை 4 மணிக்கு விரிவான தகவல்களை வெளியிட உள்ளார். இந்த நிலையில் இதுகுறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள கமலஹாசன்,
உணவின்றி அழும் குழந்தைக்கும், பணமின்றி தவிக்கும் ஏழைக்கும், இப்போதேனும் அறிவித்திருக்கும் பிரதமரின் திட்டத்தை வரவேற்கிறோம்.
அதேநேரம் நடுத்தர, அடித்தட்டு ஏழை மக்களுக்கும் இத்திட்டம் பலனளிக்குமா? காலத்தே கிடைக்குமா என நான் மட்டுமல்ல ஒட்டுமொத்த நாடும் கவனித்துக் கொண்டிருக்கிறது.
— Kamal Haasan (@ikamalhaasan) May 13, 2020
உணவின்றி அழும் குழந்தைக்கும், பணமின்றி தவிக்கும் ஏழைக்கும், இப்போதேனும் அறிவித்திருக்கும் பிரதமரின் திட்டத்தை வரவேற்கிறோம். அதேநேரம் நடுத்தர, அடித்தட்டு ஏழை மக்களுக்கும் இத்திட்டம் பலனளிக்குமா? காலத்தே கிடைக்குமா என நான் மட்டுமல்ல ஒட்டுமொத்த நாடும் கவனித்துக் கொண்டிருக்கிறது என குறிப்பிட்டுள்ளார். வழக்கம்போல் கமல்ஹாசனின் இந்த ட்விட்டுக்கும் ஆதரவு மற்றும் எதிர்ப்பு கருத்துக்களை பயனாளிகள் தெரிவித்து வருகின்றனர்.