பிகில் படம் வெளியாகுமா ? வெளியாகாதா ? என்ற நிலையில் நடிகர் விஜய் ட்வீட் செய்துள்ளார்.
அட்லி இயக்கத்தில் தெறி , மெர்சல் மாபெரும் வெற்றிபெற்றதை தொடர்ந்து 3வது முறையாக விஜய் – அட்லி பிகில் படத்தில் இணைந்துள்ளனர் . இப்படத்தை அர்ச்சனா கல்பாத்தியின் ஏஜிஎஸ் என்டெர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது . ஏஆர் ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.இப்படம் பெண்கள் கால்பந்து விளையாட்டு குறித்த கதையம்சத்தை கொண்டதாகவும், விஜய் கால்பந்து பயிற்சியாளராக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
அப்பா, மகன் என இரண்டு வேடத்தில் விஜய் நடித்திருப்பதாக தெரிகிறது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருக்கிறார். மேலும் காமெடி நடிகர் விஜய், டேனியல் பாலாஜி, யோகி பாபு, பரியேரும் பெருமாள் கதிர் உட்பட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.பிகில் படத்தின் ட்ரைலர் கடந்த 12_ஆம் தேதி வெளியாகி பல சாதனைகளை செய்து வருகின்றது. மேலும் பிகில் படம் 25_ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.
ஆனால் பிகில் படத்தின் கதை தன்னுயடையது என்று துணை இயக்குனர் கே.பி செல்வா வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. மேலும் துணை இயக்குனர் செல்வாவை காப்புரிமை வழக்கு தொடுக்க நீதிமன்றம் அனுமதியும் வழகியுள்ளது. நாளை மறுநாள் பிகில் படம் வெளியாகுமென்று அறிவிப்பு வெளியாகியும் நீதிமன்றத்தால் எந்த முடிவும் எடுக்கப்படமாக் இருப்பதால் பிகில் படம் வெளியாகுமா ? வெளியாகாதா ? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
ஆனால் பிகில் படத்துக்கு எதிராக நீதிமன்றம் எவ்வித உத்தரவையும் பிறப்பிக்கவில்லை இதனால் படம் கண்டிப்பாக வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பாத்துக் காத்து இருக்கின்றனர். அதே நேரம் பிகில் படத்துக்கு சிறப்பு காட்சி அனுமதி கிடையாது என அமைச்சர் நேற்று தெரிவித்தது விஜய் ரசிகர்களுக்கு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் நடிகர் விஜய் தனது ட்வீட்_டர் பக்கத்தில் #Bigil என்று ட்வீட் செய்துள்ளார். ரசிகர்கள் அனைவரும் இதை பகிர்ந்து வருகின்றனர்.
https://twitter.com/actorvijay/status/1186907513100259328