Categories
தேசிய செய்திகள்

மீண்டும் குற்றம் செய்வேன்… பிரியங்கா காந்தி..!!

பிறருக்கு உதவுவது குற்றம் என்றால் அந்த குற்றத்தை நான் மீண்டும் செய்வேன் என்று பிரியங்கா காந்தி கூறியுள்ளார்.

இந்தியாவில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு மற்றும் முழு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இது ஒருபுறம் இருக்க பல மாநிலத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை, படுக்கை வசதி மற்றும் தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக பல நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர்.

இதையடுத்து பிரியங்கா காந்தி 2 ரெம்டெசிவர் மருந்தை வாங்கி கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் பிரியங்கா காந்தி இடமிருந்து எப்படி 2 ரெம்டெசிவர் பெற்றீர்கள் என்று தன்னை காவல்துறை விசாரித்ததாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஷாகிப் சித்திக் டிவிட் செய்திருந்தார். அதற்கு பிரியங்கா காந்தி ” பிறருக்கு உதவுவது குற்றம் என்று கூறினாள் மீண்டும் அந்த குற்றத்தை செய்வேன்” இன்று ரீட்வீட் செய்திருந்தார். மேலும் அமைதியாக இருப்பதைவிட தான் செய்தது பெரியது என்றும் அவர் கூறினார்.

Categories

Tech |