Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு நீடிப்பா? மருத்துவ நிபுணர் குழுவுடன் நாளை முதல்வர் பழனிசாமி ஆலோசனை!

மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை ஆலோசனை நடத்த உள்ளார்.

வரும் 31ம் தேதியுடன் ஊரடங்கு முடியும் நிலையில் தமிழகத்தில் மேலும் ஊரடங்கை நீட்டிப்பதா, தளர்த்துவதா என்பது குறித்து மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார். தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 16,277ஆக உயர்ந்துள்ளது.

குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 8,324ஆக அதிகரித்துள்ள நிலையில் கொரோனா வைரஸால் இதுவரை 111 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் மே 31ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது நீட்டிக்கப்படும் நிலையில் மருத்துவ நிபுணர் அறிவுறுத்தலின் படி தமிழகத்தில் சில தளர்வுகள் வழங்கப்பட்டு வருகிறது. சலூன் கடைகள், டீ கடைகள், அத்திவாசிய கடைகள் ஆட்டோக்கள் இயக்கம் உள்ளிட்டவற்றிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் கொரோனா தாக்கத்தை பொறுத்து மேலும் சில தளர்வுகள் வழங்கப்படும் என முதல்வர் ஏற்கனவே கூறியுள்ளார். இந்த நிலையில் மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் பழனிசாமி நாளை ஆலோசனை நடத்த உள்ளார். மேலும் சில தளர்வுகள் அளித்து ஊரடங்கை நீட்டிக்கலாம் என்பது குறித்து நாளை ஆலோசனை நடத்த உள்ளனர். ஏற்கனவே நடைபெற்ற ஆலோசனையில் தற்போது ஊரடங்கை ரத்து செய்ய வேண்டாம் என மருத்துவ நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |