Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை யாஷிகா விரைவில் கைதாவாரா….? போலீசாரின் அதிரடி நடவடிக்கை….!!!

நடிகை யாஷிகா விரைவில் கைதாவார் என்று தெரியவந்துள்ளது.

பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் போட்டியாளராக பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் நடிகை யாஷிகா. இதனை அடுத்து சில படங்களில் கமிட்டாகி நடித்து வரும் யாஷிகா அவ்வப்போது தனது புகைப்படங்களையும் சமூக வலைத்தளங்களில் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை கவனத்தை ஈர்த்து வந்து கொண்டிருந்தார்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது நண்பர்களுடன் காரில் சென்று கொண்டிருக்கும் போது அவரது கார் விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் அவரது தோழி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் அவரது இரண்டு ஆண் நண்பர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நடிகை ஹன்சிகாவிற்கு 3 அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. மேலும் போலீசாரின் விசாரணையில் நடிகை யாஷிகா வேகமாக கார் ஓட்டி வந்ததால் தான் விபத்து ஏற்பட்டு இருக்கிறது என்று கண்டறிந்துள்ளனர். அதனால் ஒரு உயிர் பலி ஏற்பட்டுள்ளதால் நடிகை யாஷிகா விரைவில் கைதாவார் என்று கூறப்படுகிறது.

Categories

Tech |