3 பேரை கொன்ற ஒற்றை காட்டு யானையை வனத்துறையினர் அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள வேப்பனஹள்ளி பகுதியில் சுற்றித் திரிந்த ஒற்றை காட்டு யானை அடுத்தடுத்து 3 பேரை தாக்கிக் கொன்று விட்டது. இதனால் அந்த காட்டு யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டியடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் வனத்துறையினர் அந்த காட்டு யானையை ஜவளகிரி வனப்பகுதிக்கு விரட்டியடித்தனர்.
அதன் பிறகு கர்நாடக மாநில வனத்துறையினர் அந்த ஒற்றை காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். மேலும் ஒற்றை காட்டு யானை மீண்டும் கிராம பகுதிக்கு வராமல் இருக்க வனத்துறையினர் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.