பலாப்பழ சீசன் தொடங்கியுள்ளதால் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகளவில் காணப்படுகிறது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறது. மேலும் தற்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் வனவிலங்குகள் சாதாரணமாக சாலையில் சுற்றி திரிகிறது. இந்நிலையில் காட்டு யானைகள் பலா பழங்களை சாப்பிடுவதற்காக அப்பகுதியில் முகாமிட்டு உள்ளது. இதனை அடுத்து கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் காட்டு யானை ஒன்று அங்குமிங்கும் நடந்து சென்றுள்ளது.
இதனை பார்த்த வாகன ஓட்டிகள் சற்று தொலைவிலேயே வாகனங்களை நிறுத்தி விட்டனர். அதன் பிறகு அந்த காட்டு யானை அருகில் இருக்கும் தேயிலை தோட்டத்திற்குள் புகுந்து விட்டது. இது குறித்து வனத்துறையினர் கூறும்போது, காட்டு யானைகள் பலா பழங்களை உண்பதற்காக அப்பகுதியில் முகாமிட்டுள்ளதாகவும், வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் பயணம் செய்ய வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.