Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

நள்ளிரவில் புகுந்த விலங்குகள்…. ஆதிவாசி மக்களின் வீடுகள் சேதம்…. வனத்துறையினரின் தீவிர முயற்சி…!!

ஆதிவாசி மக்களின் வீடுகளை காட்டு யானைகள் உடைத்து சேதப்படுத்திய சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் பகுதியில் காட்டு யானைகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் கைமகொல்லி ஆதிவாசி காலனிக்குள் 2 காட்டு யானைகள் நுழைந்துவிட்டது. இந்த காட்டு யானைகள் கடம்பன், பொம்மன் உட்பட சில ஆதிவாசி மக்களின் வீடுகளை உடைத்து சேதப்படுத்தியுள்ளது. இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர்.

அதன்பிறகு காயமடைந்த 2 பேரை பொதுமக்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதுகுறித்து ஆதிவாசி மக்கள் கூறும் போது, காட்டு யானைகள் சேதப்படுத்திய வீடுகளுக்கு உரிய இழப்பீடு தொகையை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |