Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

அதை கவனிக்காமல் இருந்ததால்… விவசாயிக்கு நடந்த கொடூரம்… கதறி அழுத குடும்பத்தினர்…!!

யானை மிதித்து விவசாயி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள தேன்கனிக்கோட்டை பகுதியில் குண்டப்பா என்ற விவசாயி வசித்து வந்துள்ளார். இவருக்கு வெங்கடம்மா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் வனப்பகுதியை ஒட்டி இருக்கும் தனது நிலத்தில் பயிரிடப்பட்டுள்ள ராகியை பாதுகாப்பதற்காக குண்டப்பா இரவு நேரத்தில் அங்கு காவல் பணியில் ஈடுபடுவது வழக்கம். இதனையடுத்து வழக்கம் போல இரவு நேரத்தில் காவலுக்கு சென்ற போது காட்டு யானை ஒன்று பக்கத்து தோட்டத்தின் பயிர்களை தின்றுள்ளது. அப்போது காட்டு யானையை கவனிக்காமல் குண்டப்பா அதன் அருகில் சென்ற போது கோபமடைந்த யானை அவரை விடாமல் துரத்தியுள்ளது.

அதன் பின் யானையை பார்த்ததும் அலறியடித்து ஓடிய குண்டப்பாவை துதிக்கையால் வீசி எறிந்து, காலால் மிதித்து யானை கொன்று விட்டது. இதனால் உடல் நசுங்கி விவசாயி பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல் துறையினர் அங்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |