காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்ததால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள காலனி புதூர், காரமடை ,பட்டி சாலை போன்ற பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. இந்நிலையில் தோலம்பாளையம் பகுதியில் இருக்கும் தோட்டத்திற்குள் நள்ளிரவு நேரத்தில் புகுந்த காட்டு யானைகள் வாழைகள் மற்றும் தென்னை மரங்களை நாசப்படுத்தியுள்ளது.
இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். எனவே காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் நுழையாமல் தடுத்து, முகாமிட்டுள்ள யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டியடிக்க வேண்டும் என்று அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.