Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

கண்டிப்பா நாங்க விரட்டிருவோம்… அட்டகாசம் தாங்க முடியல… நீலகிரியில் பரபரப்பு…!!

அடிக்கடி குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்து பொதுமக்களை அச்சுறுத்தி வரும் காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் முயற்சி செய்து வருகின்றனர்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகளவில் காணப்படுகிறது. இந்நிலையில் இந்த காட்டு யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட கோரி பொதுமக்கள் திரண்டு போராட்டம் நடத்த முயற்சி செய்துள்ளனர். அப்போது வனத்துறையினர் காட்டு யானைகளை விரட்டுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து வனச்சரகர் கணேசன் தலைமையில் வன காப்பாளர் பிரகாஷ் மற்றும் வனத்துறையினர் தனியார் தோட்டத்தில் புகுந்த ஒரு காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அந்த சமயத்தில் மற்றொரு காட்டு யானை மாக்கமூலா பகுதிக்குள் நுழைந்து விட்டது. இதனால் அச்சத்தில் வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை சற்று தூரத்திலேயே நிறுத்தி விட்டனர். இந்த காட்டு யானை கூடலூர்-மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் அங்கும் இங்கும் நடந்ததால் சுமார் 30 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |