Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

உடைக்கப்பட்ட தடுப்புகள்…. அலறியடித்து ஓடிய தொழிலாளர்கள்…. வனத்துறையினரின் தீவிர கண்காணிப்பு…!!

தோட்டக்கலை பண்ணையில் காட்டு யானைகள் அட்டகாசம் செய்ததால் தொழிலாளர்கள் அச்சத்தில் அலறியடித்து ஓடினர்.

நீலகிரி மாவட்டத்திலுள்ள குன்னூர் அருகே காட்டேரி பூங்கா தோட்டக்கலை பண்ணை அமைந்துள்ளது. இந்நிலையில் இந்த பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள தடுப்புகள் மற்றும் மின்வேலியை உடைத்துக் கொண்டு காட்டு யானைகள் உள்ளே புகுந்துவிட்டது. இதனை அடுத்து காட்டு யானைகள் அங்கு பயிரிடப்பட்டிருந்த உருளைக்கிழங்கு, முள்ளங்கி மற்றும் அன்னாசி பழங்களை தின்றும், மிதித்தும் நாசப்படுத்தி உள்ளது. இதனை பார்த்ததும் அங்கு வேலை பார்த்துக் கொண்டிருந்த தொழிலாளர்கள் அச்சத்தில் தப்பி ஓடிவிட்டனர்.

அதன்பிறகு காட்டு யானைகள் அங்கிருந்த ரயில்வே நிலையம் அருகில் உள்ள தொட்டியில் தண்ணீர் குடித்துவிட்டு உலா வந்துள்ளது. இது குறித்து தகவல் அறிந்த வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காட்டு யானைகளின் நடமாட்டத்தை தீவிரமாக கண்காணித்தனர். மேலும் வனத்துறை அதிகாரிகள் காட்டு யானைகள் ஊருக்குள் நுழையாமல் இருப்பதற்காக தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Categories

Tech |