இரவு நேரத்தில் காட்டு யானைகள் குடியிருப்புப் பகுதிகளை முற்றுகையிட்டதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள பந்தலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் இந்தப் பகுதிகளுக்குள் காட்டு யானைகள் நுழைந்ததால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் அச்சத்தில் இருந்துள்ளனர்.
இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஊருக்குள் நுழைந்த காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். இதனைத் தொடர்ந்து மாலை நேரத்தில் சேரங்கோடு சாலையில் சுற்றித்திரிந்த காட்டு யானையை வனத்துறையினர் வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர்.