Categories
உலக செய்திகள்

கணவன் சமைத்த உணவை சாப்பிட்ட மனைவி … காவல் நிலையத்தில் கொடுத்த புகார்..! விசாரணையில் உறைந்துபோன போலீஸ்.!!

உத்திரப்பிரதேச மாநிலம் பிஜ்னோர்  பகுதியில் வசித்து வரும் நபர் ஒருவர் தனது மனைவிகாக உணவு சமைத்து வைத்துள்ளார்.

அவரின் மனைவி மளிகை கடைக்கு சென்று வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்கி கொண்டு மிகவும் சோர்ந்து வந்த நிலையில் குடிபோதையில் கணவன் சமைத்த உணவை சாப்பிட தொடங்கியுள்ளார்.

கணவன் சமைத்த அசைவ உணவை வாயில் வைத்த சில நொடியிலேயே அந்தப் பெண் வாந்தி எடுத்துள்ளார். அதன் பின்பு அந்த உணவை என்னவென்று கேட்டபோது அதை கேட்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்னர் தலை தெறிக்க வெளியே ஓடிவந்து  அக்கம் பக்கத்தினர் நடந்ததை கூறியுள்ளார்.

பின்பு தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு வந்த போலீசார்  கணவரிடம்  விசாரணை செய்ததில்; மது போதையில் இருந்த அவர் கங்கை கரைக்கு சென்று அங்கு எரிக்கப்பட்ட பிணங்களில் இருந்து சரியாக வேகாத  பிணத்தின் கை ஒன்றை  வீட்டுக்கு எடுத்து வந்து சமைத்ததாக கூறியுள்ளார். அதைக் கேட்டு அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து போயினர். பின்னர் அவரை போலீசார் கைது செய்தனர்.

Categories

Tech |