Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

நான் தான் இப்படி பண்ணுணேன்… மனைவியின் கொடூர செயல்… காஞ்சிபுரத்தில் பரபரப்பு…..!!

குடும்பத் தகராறில் மனைவி கணவனை சரமாரியாக வெட்டிக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள செட்டி தெருவில் ஆட்டோ டிரைவரான நவ்ஷத் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ரசியா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் நவ்ஷத் மது மற்றும் கஞ்சா பழக்கங்களுக்கு அடிமையாகி மனைவியிடம் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார்.

மேலும் கடன் தொல்லையும் இந்த தம்பதிகளுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து நவ்ஷத் வழக்கம்போல் மது அருந்தி விட்டு வீட்டிற்கு வந்து மனைவியிடம் தகராறு செய்துள்ளார். இந்த தகராறில் போது நவ்ஷத் ஆத்திரமடைந்து மரம் வெட்டும் கத்தியால் மனைவியை தாக்க முயன்றுள்ளார். அப்போது ரசியா கணவரிடமிருந்த கத்தியை வாங்கி நவ்ஷதை சரமாரியாக வெட்டிக் கொன்றுள்ளார். அதன்பிறகு ரசியா காவல் நிலையத்திற்கு சென்று நடந்தவற்றை கூறி  சரண் அடைந்துள்ளார்.

இதனை அடுத்து காவல்துறையினர் நவ்ஷத்தின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ரசியாவை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Categories

Tech |