Categories
தேசிய செய்திகள்

பகீர்!…. 10 வருடங்களாக கணவனுக்கு உணவில் விஷம் கலந்து கொடுத்த மனைவி…… கேரளாவில் தொடரும் அதிர்ச்சி சம்பவம்….!!!!!

கேரள மாநிலத்தைச் சேர்ந்த வாலிபரை குமரி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பான வழக்கு தற்போது நடந்து வரும் நிலையில் மற்றொரு கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. அதாவது விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிரியா. இவர் கேரள மாநிலம் பாறசாலை அருகே முறியங்கரை பகுதியைச் சேர்ந்த சுதீர் என்பவரை திருமணம் செய்துள்ளார். இவர் கேரளா அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பாக பிரியா குடும்பத் தகராறு காரணமாக கணவரை பிரிந்து தன்னுடைய தாய் வீட்டுக்கு சென்றுள்ளார். இந்நிலையில் காவல் நிலையத்தில் சுதீர் ஒரு பரபரப்பு புகார் கொடுத்துள்ளார். அதாவது திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த முருகன் என்பவருடன் தன்னுடைய மனைவி பிரியாவுக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டதால் கடந்த சில வருடங்களாகவே தனக்கு உணவில் விஷம் கலந்து கொடுத்ததாக கூறியுள்ளார்.

அதோடு தன்னுடைய வீட்டின் பீரோவில் இருந்து எடுத்த அமோனியம் பாஸ்பேட் மற்றும் சிரஞ்சை போன்றவற்றையும் ஆதாரமாக சுதீர் காவல் நிலையத்தில் கொடுத்துள்ளார். கடந்த 10 வருடங்களாகவே தனக்கு வீட்டில் சாப்பிட்டால் உடல் நல கோளாறு ஏற்பட்டு விடும் என்றும் சுதீர் தெரிவித்துள்ளார். அந்த புகாரின் படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் கள்ளக்காதலுடன் உல்லாசமாக வாழ்வதற்காக கணவருக்கு மனைவியை விஷம் கொடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |