Categories
உலக செய்திகள்

மருத்துவமனை இயக்குநர் கொரோனாவால் மரணம்… வாகனத்தின் பின்னால் கதறி அழுது ஓடும் மனைவி… நெஞ்சை உருக்கும் வீடியோ..!!

ஊகான் மருத்துவமனை இயக்குநர் கொரோனா வைரசால் பலியான நிலையில், அவரது உடல் எடுத்துச் செல்லப்பட்டபோது அவரது மனைவி வாகனத்தின் பின்னால் கதறி அழுதபடி ஓடிய காட்சி வெளியாகி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவில் ஊகான் நகரில் முதலில் பரவிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகின்றது. இதுவரையில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் 72 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தநிலையில் கொரோனாவின் பிறப்பிடமாக கருதப்படும் ஊகான் நகரில் இருக்கும் வூச்சங் (Wuchang) மருத்துவமனையின் இயக்குநர், லியூ ஷிமிங்கும் கொரோனா வைரஸ் பாதிப்பால் பலியானார்.

இதையடுத்து அவரது உடல் அடக்கம் செய்வதற்கு வாகனத்தில் கொண்டு செல்லப்பட்டது. அப்போது அவரது மனைவி (செவிலியர்) தனது கணவரின் பிரிவை தாங்கிக் கொள்ள முடியாமல் கதறி அழுதபடி வாகனத்தின் பின்னாலேயே ஓடுகிறார். அவரை மற்றொரு செவிலியர் தடுக்கிறார். ஆனாலும் மீறி வண்டியின் பின் ஓடுவதை பார்க்கும்போது அனைவரையுமே கண்கலங்க வைக்கிறது.

Categories

Tech |