Categories
தேசிய செய்திகள்

மனைவியை கடித்ததால் எதிர்வீட்டு செல்லப்பிராணி நாயை… துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற நபர்… அதிர்ச்சி சம்பவம்…!!!

தன் மனைவியை எதிர் வீட்டில் இருந்த நாய் கடித்ததால் அதை கணவர் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியபிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த நரேந்திர விஷ்வையா என்பவர் தனது மனைவியுடன் இந்தூரில் சுதாமா என பகுதியில் வசித்து வருகிறார். அதே பகுதியில் எதிர் வீட்டில் ஒரு குடும்பம் வசித்து வருகிறது. அந்த குடும்பம் ஒரு நாயை செல்லப் பிராணியாக வளர்த்து வருகின்றன. இதையடுத்து நரேந்திர விஷ்வையாவும், அவரது மனைவியும் வீட்டிற்கு வரும் போதெல்லாம் அந்த நாயை அடிக்கடி குறைத்துக் கொண்டே இருக்கும்.

புதன்கிழமை இரவு நரேந்திர விஷ்வையாவின் மனைவி வீட்டின் அருகே நடந்து சென்ற போது எதிர் வீட்டில் இருந்து வேகமாக ஓடி வந்த நாய் அவரைக் கடித்து விட்டது. இந்த சம்பவம் குறித்து அவர் வீட்டுக்குச் சென்று தனது கணவரிடம் கூறியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த நரேந்திர விஷ்வையா தன்னிடம் இருந்த உரிமம் பெற்ற துப்பாக்கி எடுத்து அந்த நாயை சுட்டுள்ளார். கழுத்தில் குண்டு பாய்ந்ததால் செல்லப்பிராணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. இதுகுறித்து உரிமையாளர்கள் அளித்த புகாரின் பெயரில் நரேந்திர விஷ்வையாவை போலீசார் கைது செய்தனர்.

Categories

Tech |