வெஸ்ட் இண்டீஸ் -இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெறுகிறது.
வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. இதில் இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி வருகின்ற 23-ஆம் தேதி தொடங்குகிறது. இத்தொடருக்கான 17 பேர் கொண்ட இங்கிலாந்து அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் விளையாடிய ஜோஸ் பட்லர் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகி நாடு திரும்பியுள்ளார். இதனால் அவருக்கு பதிலாக மாற்று வீரராக சாம் பில்லிங்ஸ் இங்கிலாந்து டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இதற்கு முன்பாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரில் அவர் இடம்பெற்றிருந்தார். தற்போது ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் சாம் பில்லிங்ஸ் விளையாடுவதால் அவருக்கு பதிலாக மாற்று வீரராக ஹாரி ப்ரூக் இங்கிலாந்து டி 20 அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இதுவரை 45 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 1,086 ரன்கள் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.