Categories
உலக செய்திகள்

பெண்கள் அதிகமாக குடிக்க காரணம் என்ன….? ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்….!!

பெண்கள் அதிகமாக மது குடிக்க என்ன காரணம்? என்பது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவுகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

தற்போது இருக்கும் காலக்கட்டத்தில் ஆண்களுக்கு நிகராக பெண்கள் பலரும் மது குடிக்க தொடங்கி விட்டனர். குறிப்பாக, நகர்புறங்களில் அது வெகு சாதாரணமாக மாறிவிட்டது. இந்நிலையில், பெண்கள் அதிகமாக குடிப்பதற்கு காரணம் என்ன? என்று அமெரிக்காவில் உள்ள  அரிசோனா ஸ்டேட் பல்கலைக்கழக உதவி ஆராய்ச்சி பேராசிரியை, ஜூலி பேட்டக்-பெக்கம், ஆய்வு மேற்கொண்டிருக்கிறார்.

அதற்காக, ஒரு பரிசோதனை ஆய்வகத்தில் பணியாளர்கள், நாற்காலிகள் மற்றும் உரையாடல்களுடன் ஒரு அமைப்பை ஏற்படுத்தி, அதில் 105 பெண்களும் 105 ஆண்களும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். இந்த ஆய்வில், பங்கேற்றவர்கள் மன அழுத்த நிலை மற்றும் மனஅழுத்தம் இல்லாத நிலையில் எவ்வளவு குடிக்கிறார்கள்? என்ற வகையில் பிரிவுகளாக பிரிக்கப்பட்டது.

அதன் பின்பு அவர்கள் மது பானங்களை குடிக்க தொடங்கினார்கள். இதில் சிலர், ஆல்கஹால் கலந்த குளிர்பானங்களை எடுத்ததோடு, சிலர் ஆல்கஹால் கலக்காத குளிர்பானங்களை குடித்தனர். அதனைத்தொடர்ந்து சுமார் ஒன்றரை மணி நேரங்கள் எந்தவித தடையும் இல்லாமல் அனைவரும் மதுபானம் அருந்த அனுமதி வழங்கப்பட்டது.

அதனை வைத்து ஆய்வு செய்ததில் முதலில் சாதாரண சூழலில் ஆல்கஹாலை கலந்து மதுபானம் அருந்திய ஆண்கள், மன அழுத்த சூழலில் குளிர்பானம் எடுத்துக் கொண்ட ஆண்களை விட அதிகமாக குடித்திருக்கிறார்கள். ஆனால் பெண்கள், குளிர்பானம், மதுபானம் என எந்தவித வேறுபாடுமின்றி, மன அழுத்த சூழலில் மிக அதிகமாக மதுபானங்களை குடித்திருக்கிறார்கள் என்று இந்த ஆய்வின் முடிவில் தெரியவந்திருக்கிறது.

மேலும், பெண்களை விட அதிகமாக ஆண்கள் மதுபானம் அருந்துவது தெரியவந்திருக்கிறது. எனினும் பெண்கள் எளிதில் மதுவிற்கு அடிமையாகி விடுகிறார்கள் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியிருக்கிறது. மேலும், அதிகமாக மதுபானம் அருந்தும் பெண்கள், அதிக ஆபத்துகளில் மாட்டிக்கொள்கிறார்கள் என்றும் கூறப்பட்டிருக்கிறது.

Categories

Tech |