செய்தியாளர்களிடம் பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், திமுகவில் உதயநிதி ஸ்டாலின் சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார், அதனால் அவர் அமைச்சராகிறார். ஒண்ணே ஒன்று தெரிகிறது திரு ஸ்டாலின் அவர்களின் அவசரம் ஏன் என்று தான் தெரியவில்லை ? அமைச்சராவதில் எந்த தவறும் இல்லை.
அதே நேரத்தில் அவர்கள் தந்தையார் திரு ஸ்டாலின் அவர்கள் 1989இல் சட்டமன்ற உறுப்பினரான போது அவர்கள் ஆட்சி வந்த போது அவர் அமைச்சராகவில்லை. இதில் ஏதோ ஒரு அவசரம் தெரிகிறது, அந்த அவசரத்திற்கு காரணம் என்னவென்று காலம் தான் உணர்த்தும். நான் ஏற்கனவே உங்களுக்கு சொல்லி இருக்கிறேன். தேர்தல் வாக்குறுதிகளை சொல்லிட்டு மக்களை ஏமாற்றுவது தான் திராவிட மாடல் ஆட்சி, புதுச்சேரி மக்கள் அப்படி ஏமாறுவார்களா ? என்று தெரியாது.
ஏனென்றால் தமிழ்நாட்டு மக்கள் இன்றைக்கு வருத்தப்படுகிறார்கள். பழனிச்சாமி கம்பெனியுடைய தவறான ஆட்சியால் பாதிக்கப்பட்ட மக்கள், பத்தாண்டுகள் எதிர்க்கட்சியாக இருந்த திமுக திருந்தி இருப்பார்கள் என்று வாய்ப்பு கொடுத்தார்கள். அதனால் இன்றைக்கு ஏன் அவர்களை ஆட்சிக்கு கொண்டு வந்தோம், விடியல் ஆட்சி என்றார்கள்… யாருக்கும் விடியாத ஆட்சியாக போய்விட்டது என்று, மக்கள் இங்கே கொதித்துக் கொண்டிருக்கிறார்கள் என தெரிவித்தார்.