Categories
சினிமா தமிழ் சினிமா

கணவர் பெயரை நீக்கியது ஏன்? பிக் பாஸ் பிரபலத்தின் மனைவி திடீர் முடிவு….!!!

பிக்பாஸ் பிரபலம் அபிநய்யின் மனைவி தனது பெயருக்குப் பின்னால் இருந்த கணவர் பெயரை நீக்கியுள்ளது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. நான்கு சீசன்களை வெற்றிகரமாக கடந்துமுடிந்த இந்நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் தற்போது விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. இறுதி கட்டத்தை நோக்கி போட்டியாளர்கள் சென்று கொண்டிருக்கும் இவ்வேளையில் கடந்த வாரம் எளிமினேஷனில் அபிநய் வெளியேற்றப்பட்டார்.

இந்நிலையில் அபிநய்யின் மனைவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது பெயருக்குப் பின்னால் இருந்த அபிநவ் என்ற பெயரை நீக்கியுள்ளார். பிக்பாஸ் வீட்டிற்குள் அபிநய்க்கும் பாவனிக்கும் இடையே காதல் இருப்பதாக பேசப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. கமலஹாசனும் இருவரும் அமைதியாக இருந்ததற்கு கண்டனம் தெரிவித்தார்.

இதுதான் தற்போது அபிநய் மனைவி தன் பெயருக்குப் பின்னால் இருந்த கணவர் பெயரை நீக்கியதற்கு காரணம் என சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டு வருகிறது. மேலும் இவர்கள் இருவருக்கும் வேறு ஏதாவது பிரச்சினையா என்று ரசிகர்கள் குழப்பமடைந்துள்ளனர்.

Categories

Tech |