தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். இவர் மாநகரம் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான நிலையில், கைதி, மாஸ்டர் மற்றும் விக்ரம் போன்ற பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கியுள்ளார். இவர் தற்போது நடிகர் விஜயுடன் இணைந்து தளபதி 67 திரைப்படத்தை இயக்க இருக்கிறார். இந்த படத்தன்தின் சூட்டிங் அடுத்த மாதம் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் பூஜை சமீபத்தில் ஏவிஎம் ஸ்டுடியோவில் வைத்து எளிமையான முறையில் நடைபெற்ற நிலையில், நடிகர் விஜய், இயக்குனர் லோகேஷ் கனகராஜ், தயாரிப்பாளர் லலித், பிரியா ஆனந்த் மற்றும் அர்ஜுன் ஆகியோர் பூஜையில் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் நடிகர் விஷால் தளபதி 67 திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில், அவரே தான் படத்தில் நடிக்கவில்லை என்ற தகவலை தற்போது உறுதிப்படுத்தியுள்ளார். இது தொடர்பாக நடிகர் விஷால் கூறியதாவது, எனக்கு தளபதி 67 திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. ஆனால் அந்த சமயத்தில் நிறைய படங்களில் கமிட்டாகி இருந்ததால் என்னால் தளபதி 67 திரைப்படத்தில் நடிக்க முடியவில்லை. இது எனக்கு வருத்தமாக இருக்கிறது. மேலும் வருங்காலத்தில் நடிகர் விஜயிடம் கதையை கூறி அவரை வைத்து ஒரு படம் இயக்க வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.