ரேபிட் டெஸ்ட் கிட் கருவிகளை அதிமுக அரசு வாங்கியது தொடர்பாக திமுக தலைவர் முக.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனாவின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியது முதலே மாநில அரசு சுகாதாரப்பணிகளை முடுக்கி விட்டது. மருத்துவ உபகரணங்களை ஆர்டர் செய்த தமிழக அரசு கொரோனா இருக்கின்றதா இல்லையா ? என்பதை துரிதமாக கண்டறியும் ரேபிட் டெஸ்ட் கிட் சோதனைக் கருவிகளை வாங்கியது.
தமிழக அரசு கொரோனா தடுப்பு பணிகளை சிறப்பாக கையாண்டதன் விளைவாகத்தான் இன்று கொரோனா பாதிப்பில் ஆறாவது இடத்தில் இருக்கும் தமிழகம், அதிகமானோரை குணப்படுத்திய மாநிலங்கள் வரிசையில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. தமிழக அரசின் செயல்பாடுகள் குறித்து அவ்வப்போது எதிர்க்கட்சி திமுக விமர்சித்து வருகிறது. அந்த வகையில் தற்போது திமுக தலைவர் மு க ஸ்டாலின் 240 ரூபாய் மதிப்புள்ள ரேபிட் டெஸ்ட் கிட் கருவிகளை அதிமுக அரசு 600 ரூபாய்க்கு வாங்கியது ஏன்? என்ற கேள்வி எழுப்பியுள்ளார்.