கன்னட சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் நடிகர் யஷ். இவர் நடித்த கேஜிஎஃப் மற்றும் கேஜிஎப் 2 திரைப்படங்களின் மூலம் உலக அளவில் மிகவும் பிரபலமானார். இந்த படத்தின் மூலம் நடிகர் யஷ்க்கு இந்தியா முழுவதும் அதிக அளவில் ரசிகர்கள் உருவாகியுள்ளார்கள். இந்நிலையில் நடிகர் யஷ் சமீபத்தில் இந்தியா டுடே கான்க்ளேவ் மும்பை 2022 என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவரிடம் நீங்கள் கன்னட சினிமாவில் நடிக்கும் பான் இந்தியா ஸ்டாரா? அல்லது பான் இந்தியா ஸ்டாராக மாறியுள்ள கன்னட நடிகரா என்று கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு யஷ் கூறியதாவது, நான் ஒரு கன்னட நடிகர் என்பதை யாராலும் மாற்ற முடியாது. ஆனால் நான் ஒரு இந்தியர். நம் நாட்டில் நம் எல்லோருமே இந்தியர்கள். நாம் எல்லோரும் ஒருவருக் கொருவர் கலாச்சாரத்தில் தான் வேறுபடுகிறோம். பொதுவாக கர்நாடகாவில் துளு கலாச்சாரம் பின்பற்றப்படும் நிலையில், வட கர்நாடகத்தில் வேறு கலாச்சாரம் பின்பற்றப்படுகிறது. இது போன்றவைகள் நம்முடைய பலம்.
ஆனால் இவற்றையே பலவீனமாக மாற்றி விடக்கூடாது. என்னைப் பொறுத்தவரை சினிமா ஒரு தொழில் என்பதால் அதை வடக்கு மற்றும் தெற்கு என பிரித்து பார்க்க பேசக்கூடாது. இது போன்ற பேச்சுகளில் இருந்து மக்கள் எப்போதோ வெளிவந்து விட்டார்கள். தற்போது யாருமே பாலிவுட் ஸ்டார் மற்றும் மற்ற மொழிகளின் ஸ்டார் என்று பிரித்து பேசுவதில்லை என்று கூறினார். மேலும் நடிகர் யஷ்ஷின் பேட்டியை அவருடைய ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள்.