அமெரிக்க அரசு, உலக சுகாதார மையத்தின் அவசரகால பயன்பாட்டில் உள்ள தடுப்பூசி பட்டியல்களுக்கு ஒப்புதல் வழங்கியிருக்கிறது.
உலக சுகாதார மையமானது, ஜான்சன் அண்ட் ஜான்சன், அஸ்டராஜெனகா, மாடர்னா மற்றும் பைசர் போன்ற தடுப்பூசிகளை அவசரகால பயன்பாட்டு பட்டியலில் வைத்திருக்கிறது. இந்நிலையில், அமெரிக்க நாட்டின் நோய் கட்டுப்பாட்டு ஆணையமானது, உலக சுகாதார மையத்தின் இந்த அவசரகால பயன்பாட்டு பட்டியலில் இருக்கும் தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் அளித்திருக்கிறது.
இதேபோல இரண்டு வேறு தடுப்பூசிகளையும் சேர்த்து பயன்பாட்டிற்கு ஒப்புதல் அளித்திருக்கிறது. அமெரிக்க நாட்டிற்கு பயணிக்க இந்த ஒப்புதல் பயனுள்ளதாக இருக்கும் என்று நாட்டின் நோய்க் கட்டுப்பாட்டு ஆணையத்தின் பயணிகளுக்குரிய சுகாதார பிரிவின் தலைவர் சிண்டி பிரீட்மேன் கூறியிருக்கிறார்.