காலாவதியான தலைவர்களே பாஜகவை காலாவதியான கட்சி என்கிறார்கள் என பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
அரசு பள்ளியில் படிக்கின்ற ஏழை குழந்தைகள் பயன்பெறும் வகையில் கொண்டுவந்த 7.5 சதவீத சட்டமசோதாவை ஆரம்பம் முதலே பாஜக ஆதரிக்கின்றது, சட்ட மசோதாவை நாங்கள் வரவேற்கின்றோம். ஒவ்வொரு கட்டத்திலும் பாரதிய ஜனதா கட்சி இந்த 7.5 சதவீத இட ஒதுக்கீடு கொடுக்கப்பட வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருந்தோம். ஏற்கனவே எங்களுடைய தேசிய தலைவர் நட்டா அவர்கள் ஹெல்த் மினிஸ்டர் ஆக இருக்கும் போது அந்தந்த மாநிலங்கள் அவர்கள் தேவைக்கு ஏற்ப சட்டங்கள் கொண்டு வரலாம் என்று சொல்லி இருக்காங்க.
அதனை ஃபாலோ பண்ணி, இன்னைக்கு நாங்க வரவேற்கின்றோம். இன்றைக்கு தமிழக அரசாங்கம் அரசாணை வெளியிட்டு இருக்கிறார்கள் தமிழக பாரதிய ஜனதா கட்சி வரவேற்கிறது.
என்று பாஜக மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்தார். மேலும் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் என்பதால் பாஜகவின் வேல் யாத்திரைக்கு தடை விதிக்க வேண்டும் என திருமாவளவன் சொல்கிறாரே என்ற கேள்விக்கு….
அதை யார் யார் சொல்கிறார்களோ அவர்கள் தான் சட்ட ஒழுங்கை கெடுக்கணும்னு நினைச்சுக்கிட்டு இருக்காங்க என்று நான் நினைக்கிறேன். பாஜகவில் காலாவதியான தலைவர்கள் தான் இருக்கிறார்கள், காலாவதியான கட்சி என்று சொல்கிறார்கள் என்ற கேள்விக்கு… அதை காலாவதியான தலைவர்கள் சொல்கிறார்கள் என்று பதிலடி பாஜகவின் மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.