உலக சுகாதார மையமானது உலக நாடுகளில் மொத்தமாக சுமார் 100 கோடி மக்கள் மனநிலை பிரச்சினைகளோடு இருப்பதாக தெரிவித்திருக்கிறது.
உலக நாடுகளில் மக்களின் மனச்சோர்வு குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, 2019ஆம் வருடத்திற்கு பின் மக்களின் மனச்சோர்வு, 25% உயர்ந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019ஆம் வருடத்திற்கு பின் உலக நாடுகளில் முழுக்க 100 கோடி மக்களுக்கு மனநிலை பிரச்சினைகள் இருப்பதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இதில், இளம் பெண்களுக்கும், இளைஞர்களுக்கும் தான் அதிகமாக மன சோர்வு ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உலக நாடுகளில் 14%இளம் வயதினர் மனச்சிதைவால் பாதிப்படைந்திருக்கிறார்கள் என்று தெரிய வந்திருக்கிறது.
வரும் காலங்களில் இதன் காரணமாக தற்கொலை சம்பவங்கள் அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும், மக்கள் மனச்சோர்வு அடைவதால் கடும் பின் விளைவுகள் உண்டாகும். இதனால், உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று உலக சுகாதார மையம் தெரிவித்திருக்கிறது.