காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவரை முடிவு செய்வதற்கான காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் அடுத்த வாரம் நடைபெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
பதவியிலிருந்து ராகுல் காந்தி விலகி 10 நாட்கள் ஆன பிறகும் புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான நடவடிக்கைகள் தொடங்கபடவில்லை.முகுல் வாஸ்னிக்,மல்லிகார்ஜுன கார்கே முதல் சச்சின் பைலட் உள்ளிட்ட இளம் தலைவர்கள் வரை அடுத்த காங்கிரஸ் தலைவருக்கான போட்டியில் இருப்பதாக காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் பேசப்பட்டாலும் அதிகாரப்பூர்வமாக எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
குலாம்நபி ஆசாத் ,அகமது பட்டேல் ,முகுல் வாஸ்னிக்,ஆனந்த் சர்மா உள்ளிட்ட மூத்த தலைவர்கள் புதிய தலைவர் குறித்து பலமுறை கூடிப் பேசி உள்ளதாவும் அவர்கள் மற்ற தலைவர்கள் மற்றும் காங்கிரஸ் ஆளும் மாநில முதலமைச்சர்களின் பரிந்துரைகளையும் மூடி முத்திரையிட்ட உரையில் அளிக்க கூறியுள்ளதாகவும் ,அவற்றிலிருந்து தகுதியுள்ள ஒரு தலைவர் தேர்ந்தெடுக்கபட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.இதனிடையே ராகுல்காந்தியின் ராஜினாமா ஏற்கப்படும் வரை அவர்தான் தலைவர் என்பதால் புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான மூத்த தலைவர் குழுவை அவர் அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.