செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், தனியார் தொலைக்காட்சியில் இருக்கின்ற ஊடக நண்பர் ஒருவர் மழைநீர் குழியில் விழுந்து மரணம் அடைந்தார் என்றால், அதற்கு என்ன நடவடிக்கை எடுத்தார்கள்? யார் யார் மேல கிரிமினல் கேஸ் போட்டீங்க. கிரிமினல் கேஸ் போட்டு உள்ள தள்ளுங்க. அதுக்கு யார் யார் காரணம் என்று.. காண்ட்ராக்டர் யாரு ? இஇ யாரு ? எ.இ யாரு ? எஸ்.சி யாரு ? சிஇ யாரு ? கேஸ் போட்டு சஸ்பெண்ட் பண்ணுங்க, அப்பதான் பயப்படுவாங்க. அந்த மாதிரி எதுவுமே இல்லாம, வெறும் அஞ்சு லட்சம் கொடுத்துட்டா.
கோர்ட்டிலேயே ஒரு விபத்து கேஸ் போகுது. ஜட்ஜ் என்ன கணக்கில் எடுப்பாரு ? அவரு இப்போ எவ்வளவு சம்பளம் வாங்குகிறார் ? அவர் எத்தனை வருஷம் உயிரோட இருப்பார் ? அத்தனை வருஷத்துக்கு மல்டிப்ளிகேஷன் போட்டு, ஒட்டு மொத்தமா 30 லட்சம், 40 லட்சம் வீட்டுக்கு வருமா வராதா? இந்த மாதிரி தான ஆக்சிடென்ட் கேஸ்ல வருது. அப்போ என்ன செய்யணும் என்றால் ?
அவர் எவ்வளவு தனியார் தொலைக்காட்சியில் சம்பளம் வாங்குறாரோ, அந்த சம்பளத்தை நீங்க அவரோட வாழ்நாள் எவ்வளவு தூரம், 80 வயசு வரைக்கும் இருப்பாரு. 80 வயசு வரை கணக்கு போட்டு, பணத்தை கொடுங்க நீங்க. உங்க தவறு தான அது. உங்க தவறுக்கு போய் அஞ்சு லட்சம் கொடுத்தீங்கன்னா.. இந்த காலத்துல அஞ்சு லட்சம் எந்த மூலைக்கு.
அந்த குடும்பத்துக்கு ஈடாகுமா ? அந்த குடும்பம் 5 லட்சம் வச்சு பிழைக்க முடியுமா ? அரசு வேலை ஒன்னு குடுங்க, அதுவும் வாய் திறக்கல. ஊடக நண்பர்களுக்கு இப்படி ஒரு நிலைமை, பொது மக்களுக்கு இப்படி ஒரு நிலைமை, ஒட்டுமொத்தமா தமிழகத்திற்கு ஒரு அவல நிலை தான் இந்த விடியாத ஆட்சியில் என விமர்சனம் செய்தார்.