தமிழக சட்டப்பேரவையில் நேற்றைய விவாதத்தில் முக.ஸ்டாலினை நோஸ்கட் செய்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதிலளித்தார்.
பள்ளிக்கல்வித்துறை இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டு துறை மற்றும் உயர்கல்வித் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நேற்று நடைபெற்ற போது , ஐந்தாம் வகுப்பு பொதுத் தேர்வை குறித்து திமுகவின் பொன்முடி பேசினார். இதற்க்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஐந்தாம் வகுப்பு , எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படுவதன் மூலம் மாணவர்களின் கல்வித்தரம் உயரும் என்று தெரிவித்தார்.முதலமைச்சர் பேசியதாவது ,
ஐந்தாம் வகுப்பு எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படுவதன் மூலம் மாணவர்களின் கல்வித்தரம் உயரும். நீங்களே சிந்தித்துப் பாருங்கள் அன்றைய கல்விக்கும் இன்றைய கல்விக்கும் என்ன வேறுபாடு இருக்கிறது. நாம் படித்த காலத்தில் சரியான முறையில் படிக்கவில்லை என்றால் இரண்டாம் வகுப்பு , மூன்றாம் வகுப்பிலேயே தேர்ச்சி நிறுத்தி வைப்பார்கள். இதனால் கல்வித்தரம் உயரும்.
ஐந்தாம் வகுப்பு , எட்டாம் வகுப்பு பரிட்சையில் தேர்ச்சி பெற வைத்தால், பத்தாம் வகுப்பை நேரடியாக எப்படி அந்த மாணவன் எதிர் கொள்ள முடியும் சொல்லுங்க. ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவனுடைய தரம் என்னவென்று அவனுக்கு தெரியாது, அவருடைய பெற்றோருக்குத் தெரியாது, ஆசிரியருக்கு தெரியாது. ஆகவே பரிட்சை வைத்தால்தான் அவன் தரம் என்னவென்று தெரியும்.
அப்போது தான் அந்த மாணவனுக்கு நல்ல கல்வியை கொடுக்க முடியும். இப்போதே தேர்வு வைத்தால் தான் எஸ்எஸ்எல்சி படிக்கும் போகும் அந்த மாணவன் நல்ல முறையில் தேர்வு எழுதி அதிக மதிப்பு பெற்று உயர்கல்வி போக முடியும். ஆனால் எல்லோரும் சொல்லுகின்ற கோரிக்கையின் அடிப்படையில் நாம மட்டும் ஏன் இதை எதிர்க்க வேண்டும் அப்படின்னு தான் ரத்து செய்த தீவிர நீங்க சொன்னதுக்காக இரத்து செய்ய வில்லை என்று முதல்வர் எடப்பாடி ஸ்டாலினை நோஸ்கட் செய்தார்.