Categories
உலக செய்திகள்

ஏழை நாடுகளுக்கு இத்தனை கோடி தடுப்பூசிகளா….? கோவேக்ஸ் திட்டத்தில் WHO சாதனை….!!!

பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகளுக்கு ஐ.நா சபை மூலமாக கோவேக்ஸ் திட்டத்தின் கீழ் தற்போது வரை 100 கோடி டோஸ் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக நாடுகள் தடுப்பூசி செலுத்த தொடங்கிய போது, பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகள் தடுப்பூசி செலுத்த முடியாத நிலையில் இருந்தது. எனவே, ஐநா சபை, அந்நாடுகளுக்கு உதவ கோவேக்ஸ் என்ற உலகலாவிய தடுப்பூசி திட்டத்தை கடந்த 2020-ஆம் வருடம் ஏப்ரல் மாதத்தில் துவக்கி வைத்தது.

இதன்படி, பொருளாதாரத்தில் முன்னிலையில் உள்ள நாடுகள் நன்கொடையாக வழங்கும் தடுப்பூசிகள், ஏழை நாடுகளுக்கு வழங்கப்படும். உலக சுகாதார மையம், தடுப்பூசிகள் விநியோகிப்பதில் சமத்துவமின்மை நிலவுகிறது என்று தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது.

மேலும், கடந்த 13-ம் தேதி நிலவரத்தின்படி, 194 உறுப்பு நாடுகளில் 36 நாடுகள் 10%க்கும் குறைவாக தடுப்பூசி அளித்திருக்கிறது. மேலும், 88 நாடுகள் 40%-க்கும் குறைந்த அளவில் தடுப்பூசி செலுத்தியிருப்பதாக உலக சுகாதார மையம் கூறியிருக்கின்றது.

Categories

Tech |