எம்ஜிஆர் புகைப்படத்தை பயன்படுத்தும் முழு தகுதி கொண்ட ஒரே இயக்கம் அதிமுக தான். எம்ஜிஆரின் கொள்கைக்கு மாறாக இருக்கும் கட்சிகள் அவரின் புகைப்படத்தை பயன்படுத்தக்கூடாது என்று அதிமுகவின் வைகைச்செல்வன் அறிவித்துள்ளார். முன்னதாக எம்.ஜி.ஆரை போல பிரதமர் மோடியும் நல்லது செய்வதாகவும், பெண்களிடம் நல்லபெயர் வாங்குவதாகவும் எல்.முருகன் பேசி இருந்த நிலையில், இவ்வாறு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக இருந்து வரும் நிலையில், பாஜக தலைவர் தங்களது தலைவரின் பெயரை பயன்படுத்துவதை அதிமுக விரும்பவில்லையோ என்ற கேள்வி எழுவது மட்டுமல்லாமல், இதனால் கூட்டணிக்குள் புகைச்சல் ஏற்படும் என்று பாஜக தொண்டர்கள் மத்தியில் ஒரு அதிருப்தி ஏற்படுத்தி உள்ளது.